இந்த அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"வங்கக்கடலில் கச்சத்தீவுக்கும்,  கோடியக்கரைக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை அவர்களின் விசைப்படகுடன் சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

கடந்த 10 நாட்களில்,  மூன்றாவது முறையாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சிங்கள அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்.

கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் படகுகளுடன் மீட்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும்  விரைந்து மீட்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to srilankan govt july 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->