ஸ்டாலின் பேச்சை அ.தி.மு.க. நிறைவேற்றும்!...முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி,  அனைத்து வரிகளையும் தி.மு.க ஆட்சியில் உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சரின்  200 தொகுதிகளின் வெற்றி என்ற பேச்சை செயல்படுத்தப்போவது அ.தி.மு.க. தான் என்றும், வரும் தேர்தலில் அ.தி.மு.க. 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.

மேலும், மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 6 சதவீத வாக்குகள் குறைந்ததாகவும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் அதிமுக- விற்கு  வரும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அ.தி,மு.க.வில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை என்றும், தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் முடிவெடுப்பார் என்றும், மக்களின் முக மலர்ச்சியே இந்த ஆட்சிக்கு சாட்சி என முதலமைச்சர் கூறியுள்ளார். பின்னர்  எதற்காக ஆறு சதவீத வாக்கு குறைந்தது விமர்சித்து பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin speech by aiadmk it will be fulfilled ex minister thangamani sensational interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->