இதெல்லாம் ஒரு பிரச்சனையா? தமிழக அரசின் பட்ஜெட்டில்... அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, மத்திய அரசு 48 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எதுவும் வராதா?

இதுவரைக்கும் தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் சொல்லி இருக்கிறார்களா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்யும் போது இவ்வளவு காலம் பட்ஜெட் போட்டு உள்ளது. அனைத்து மாநிலங்கள் பெயர்களையும் அவர்கள் சொல்லி இருக்கிறார்களா? 

இந்த பட்ஜெட்டை பொருத்தவரைக்கும் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் மூலம் தமிழகத்திற்கு கூடுதலான திட்டங்களும், கூடுதல் நிதி ஒதுக்கிடும் கொடுத்துள்ளார்கள்.

இன்னும் சிறிது காலத்தில் அது என்னென்ன என்பது நமக்கு தெரிந்துவிடும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ரயில்வே துறையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 6500 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 200 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளார்கள். இதே போல் ஒவ்வொரு துறையிலும் தமிழகத்திற்கு கூடுதலாக தான் நிதியை கொடுத்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டில் பெயர் சொல்லவில்லை, புறக்கணிக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அரசியல்.

கடந்த முறை மழை வெள்ளத்தின் போது கூட தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன். அது ஒரு புறம் இருக்கட்டும். 

நான் இப்போது தமிழக அரசை பார்த்து கேட்கிறேன்... நீங்கள் ஆண்டு தோறும் 3 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறீர்கள். இதில் ஒரு ஆயிரம் கோடி ரூபாய் மழை வெள்ளத்திற்காக ஒதுக்கீடு செய்ய முடியாதா? அப்போ உங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லையா?

மழை வரும் என்று தெரியாதா? வெள்ளம் வரும் என்று தெரியாதா? வறட்சி வரும் என்று தெரியாதா? அப்போ உங்கள் பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதா? அனைத்திற்கும் மத்திய அரசுதான் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். மத்திய அரசு நிதி கொடுத்து தான் ஆக வேண்டும். அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.

மாநில அரசுக்கு உங்களுக்கென்று ஒரு கடமை இல்லையா? என்பது தான் என் கேள்வி. இது நிதி பற்றாக்குறை இல்லை, இது திட்டமிடுதல். அடுத்த ஆண்டு வெள்ளம் வரும், அடுத்த ஆண்டு வறட்சி வரும், விவசாயிகளுக்கு செய்ய வேண்டும் என்று உங்களுடைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குங்கள். 

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்களும் இந்த பட்ஜெட்டில் வரவில்லை. இது ஒரு பிரச்சனையா? பெயர் வராதது ஒரு பிரச்சனையா? நிதி வருகிறதா.. திட்டங்கள் வருகிறதா.. அப்புறம் என்ன! பெயர் வரவில்லை என்ற ஒரு அரசியல் செய்கிறீர்கள். 

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தி விட்டார்கள், தமிழகத்துக்கு வந்த தண்ணீர் கடலில் சேர்கிறது, கோவை மேயர் ராஜினாமா செய்துள்ளார், கோவையில் ஊழல் நடந்துள்ளது, கோவையில் சாலைகள் சரியில்லை இவ்வளவு பிரச்சனைகளை பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அவர்கள் செய்யக்கூடிய அரசியலுக்காக திரும்ப திரும்ப பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெறவில்லை என்ற அரசியலை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About TN Budget issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->