சீமானை வாழ்த்திய அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Wish Seeman Birthday
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த வழுத்துச் செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த வாழ்த்துச் செய்தியில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அன்பு நண்பருமான திரு.சீமான் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தான் கொண்ட கொள்கையில் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து பயணிக்கும் திரு.சீமான் அவர்கள் நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தள பக்கத்தில் "#அடுத்து நாம தான்ணே, #HBDSeeman" போன்ற ஹேஸ்டேக் மூலம் ட்ரென்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dr Anbumani Ramadoss Wish Seeman Birthday