மாவீரன் ஜெ.குருவின்  வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் : டாக்டர் இராமதாஸ்!  - Seithipunal
Seithipunal



வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த ஜெ.குருவின் ஐந்தாம் நினைவு நாளான இன்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"வாழும் வரையிலும், வாழ்க்கையை நிறைவு செய்த பிறகும் என்னிடமிருந்து பிரிக்க முடியாத மாவீரனின் ஐந்தாம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  அவனை நான் மறந்தால் தானே இந்த நாளில் நினைவு கூற முடியும். அவன் எந்நாளும்  என் நெஞ்சில் குடியிருக்கிறான். 

கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மறக்க முடியாதவை. மாவீரனின் தியாகத்தையும், வீரத்தையும் நெஞ்சில் நிறுத்தி, இந்நாளில் மட்டுமின்றி, எந்நாளும் போற்றுவோம்.


 
காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. 

இந்த நாளில் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About maveeran J Guru Memorial day 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->