கள்ளக்காதலி தற்கொலை; சோகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட டிரைவர்..!
Driver commits suicide by consuming poison after losing his fake girlfriend
கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலி இறந்த சோகத்தில் கள்ளக்காதலன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருப்பட்டியை சேர்ந்த 39 வயது மாதேஷ் திருமணமானவர். சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், மாதேசிற்கும், சந்தனப்பள்ளியை சேர்ந்த 29 வயதுடைய அஞ்சலி என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மாதேசின் மனைவி நேத்ரா, குடும்பத்துடன் ஓசூருக்கு சென்று வசித்து வந்த நிலையில், மாதேஷ் தவறாமல் கள்ளக்காதலி அஞ்சலியை சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 26-ந் தேதி அஞ்சலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அத்துடன், கள்ளக்காதலி அஞ்சலி தற்கொலை தொடர்பாக மாதேசிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கள்ளக்காதலி இறந்ததை அறிந்த மாதேஷ் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கெலமங்கலம் அருகே பேவநத்தம் மலை பகுதிக்கு சென்ற மாதேஷ் அங்கு விஷம் குதித்துள்ளார். அதன் காரணமாக அவர் அங்கு மயங்கி கிடந்துள்ளார். அந்த பகுதியில் இருந்தவர்கள் மாதேசை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், மாதேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:
தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050
இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.
English Summary
Driver commits suicide by consuming poison after losing his fake girlfriend