பேருந்துகளை வழியில் நிறுத்தி ஓட்டுநர், நடத்துனர் போராட்டம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அவர்களை பேருந்துக்குள் வருமாறு நடத்துனர் தெரிவித்துள்ளார். இதனால், அவர்கள் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் பேருந்துகளை சாலையில் நிறுத்தி போராட்டம் நடத்தினர். பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே, தாக்குதலுக்கு உள்ளான நடத்துனர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில், படியில் நின்று கொண்டிருந்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு நடத்துனர் கண்டித்ததால் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drivers and conductors strike in kanchipuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->