சென்னை, மதுரை உயர்நீதிமன்ற பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை.!
Drones not allowed in Chennai and madurai highcourt
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்காக நீதிமன்றத்தை ட்ரோன் கேமரா மூலம் சிலர் அனுமதி இல்லாமல் வீடியோ பதிவு செய்கின்றனர்.
இந்த நிலையில் அனுமதி இல்லாமல் உயர்நீதிமன்றத்தை ட்ரோன் கேமரா மூலம் படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வீடியோ எடுத்தவரை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவித்தனர்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகிய 2 நீதிமன்றங்கள் செயல்படும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Drones not allowed in Chennai and madurai highcourt