போதைப் பொருள் கடத்தல்: தி.மு.க முன்னாள் நிர்வாகிக்கு லுக்அவுட் நோட்டீஸ்..!
Drug trafficking DMK ex executive Lookout notice
தி.மு.க நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் சுமார் ரூ. 2000 கோடி மதிப்பிலான போதை பொருட்களை கடத்துவதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு அவர் பொறுப்பில் இருந்தும் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவதாக தி.மு.க பொதுச் செயலாளர் அறிவித்தார்.
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய நிலையில் இதுவரை ஆஜராகாமல் தலைவராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு அவரது வீட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பித்து செல்லாமல் இருக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
English Summary
Drug trafficking DMK ex executive Lookout notice