பல்லடம் அருகே குவிந்து கிடந்த போதை ஊசி மருந்து.! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


பல்லடம் அருகே ஒரு காட்டுப்பகுதியில் ஊசியுடன் கூடிய நுாற்றுக்கணக்கான சிரஞ்சுகள் மற்றும் போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் குவியலாக கிடக்கின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே போதை பொருட்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. அதிலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து இதனை விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பல்லடம் அருகே கரைப்புதுார் ஊராட்சிக்குட்பட்ட, சின்னக்கரை பகுதியில் காட்டுப்பகுதி ஒன்றில், ஊசியுடன் கூடிய நுாற்றுக்கணக்கான சிரஞ்சுகள் மற்றும் போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் உள்ளிட்டவை குவியல் குவியலாக கிடந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இந்த போதை ஊசி மருந்துகளை இந்த இடத்தில கொட்டியது யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து இந்திய மருத்துவர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் தெரிவித்துள்ளதாவது:- ''வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

மருத்துவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே இவற்றை வழங்க வேண்டும். ஆனால், ஆன்லைனில் தடையின்றி கிடைப்பதால்தான் இந்த அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், உயிருக்கே அபாயம் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drugs injuction and tablet in tirupur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->