DyCM உதயநிதி போட்ட உத்தரவு: நாகூர் தர்கா பெரிய கந்தூரி உத்ஸவத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து! - Seithipunal
Seithipunal


துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்படி, நாகூரில் நடைபெறவிருக்கும் நாகூர் தர்கா பெரிய கந்தூரி உத்ஸவம் - 2024-யை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகூர் தர்கா பெரிய கந்தூரி உத்ஸவம் 2024 வரும் 02/12/2024-ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்ற நிகழ்சியுடன் தொடங்கி 15/12/2024 ஞாயிற்றுக்கிழமை கொடி இறக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை, திருச்சி, வேலூர் மதுரை, பெங்களூர், சிதம்பரம், கும்பகோணம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்கலிருந்து பொது மக்களின் வசதிகேற்ப 01/12/2024 முதல் நாகூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது .

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DyCM Udhay order Nahur Dargah special bus


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->