#BREAKING || செங்கல்பட்டில் 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு.!!
Earthquake in Chengalpattu district
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சரியாக இன்று காலை 7:39 மணி அளவில் இந்த லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதேபோன்று கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake in Chengalpattu district