இங்கு "மகளிர் மட்டும்" தான் - பிங்க் வாக்குச்சாவடி அமைத்தது ECI.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்குச்சாவடிகளுக்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் செல்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் பிங்க் வாக்குச்சாவடி மையம் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து அலுவலர்களும் ஊழியர்களும் போலீசாரும் பெண்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

அனைத்து தேர்தல் அதிகாரிகளும் ஊழியர்களும் பெண் நிற வண்ண உடை அணிந்து பணியாற்ற உள்ளனர். இதில் கர்ப்பிணிகள் கைக்குழந்தைகள் வைத்துள்ளவர்களுக்கும், முதியோர்களுக்கும் தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது எனவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI arrange pink polling booths for women


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->