11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு எப்போது? - வெளியானது அதிகார்பூர்வத் தகவல்.! - Seithipunal
Seithipunal


நடப்புக் (2024-2025) கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அந்த அட்டவணையின் படி, வரும் மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. வரும் மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 

மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 14ம் தேதிக்குள், 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department announce 11 and 12 practical exam date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->