கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில், இன்று சிறப்பான ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று  இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளிலும்  இந்தியாவில் கேரளா மற்றும் அதன் தமிழக எல்லையோரப் பகுதிகளிலும்  இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் இறைவனுக்காக முப்பது நாட்களும் நோன்பிருந்து ஏழை  மக்களுக்கு ஜக்காத் வழங்கி கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் ரம்ஜான் பண்டிகை ஆகும். நன்மைகள் அதிகமாக கிடைக்கக்கூடிய இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் உண்ணா நோன்பிருந்து  இறைவழிபாடுகளில் ஈடுபட்டு  வந்தனர்.

சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் கொண்டாட்டம் கேரள மாநிலத்திலும் தமிழகத்தின் எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் இன்று நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களிலும் பொது மைதானங்களிலும் கூடி ஈற்று பெருநாள் சிறப்பு தொழுகையை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அல்மஸ்ஜித் அல் அஷ்ரப் என்ற பள்ளிவாசலில் திரளாக கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்  தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களது  வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தமிழகத்தின் பிறப்பகுதிகளான நாகை  மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களிலும் இன்று பெருநாளுக்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் நடிகரும் இயக்குனருமான அமீர் கலந்து கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eid celebration in Kerala state and some parts of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->