#கரூர்:: பெண்கள் வார்டில் ஆண்கள் வெற்றி பெற்ற சம்பவம் - அரசு அலுவலர்கள் பணி நீக்கம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்படி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தலவாய் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண் வேட்பாளருக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சித்தலவாய் ஊராட்சியில் நடந்த வார்டு உறுப்பினர் தேர்தலில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயசீலன் என்பவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண்கள் வெற்றி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலருமான வெங்கடாசலம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் பணியாற்றும் சிவகுமார் என்பவரும் இந்த முறைக்கேட்டில் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

இதன் காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இரண்டு பேரையும் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election officials dismissed for male candidate winning in women ward in local election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->