தானியங்கி மது விற்பனை இயந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம் அதிரடி!
Elite TSAMAC Case HC Order
சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் எலைட் டாஸ்மாக் கடையில், தானியங்கி மதுபான விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி, பீர் வகைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்க்கு பாமக, அதிமுக உள்ளிட்ட அரசியல் காட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து சோதனை முறையில் 4 இடங்களில் மதுபானம் தரும் இயந்திரங்களை அமைத்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது.
"21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது. 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்று தமிழக அரசு விளக்கமளித்திருந்தது.
English Summary
Elite TSAMAC Case HC Order