காலையிலேயே பரபரப்பு... முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2011-16 காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

 

அதன் படி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்லத்தில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், சென்னையில் வைத்திலிங்கம் குடியிருக்கும் எல்எல்ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வைத்திலிங்கம் தொடர்பான மேலும் நான்கு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

enforcement department inspection in ex minister vaithilingam house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->