அதிவேகத்தில் சாகசம் செய்து பைக் ஓட்டிய இன்ஜினியர்: ரூ.12 ஆயிரம் அபராதம்! - Seithipunal
Seithipunal


பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகத்தில் சாகசம் செய்த வாலிபர்.

நாமக்கல் அடுத்த முத்துகாப்பட்டியை சேர்ந்தவர் சந்துரு (24). இன்ஜினியரான இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக் வைத்துள்ளார். அந்த பைக்கில் ரயில்வே பிளாட்பாரத்தில் ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக சென்று சாகசம் செய்துள்ளார்.

மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து முத்துக்காப்பட்டி, ரிங்ரோடு வரை 166 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று, அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நாமக்கல் போக்குவரத்து பிரிவு போலீசார், 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குபதிவு செய்தனர். 

இதையடுத்து அந்த வாலிபர் நீதிமன்றத்தில் ரூ.12 ஆயிரம் அபராதம் செலுத்தினார். மேலும் போலீசாரின் பரிந்துரையின்படி சந்துருவின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineer who rode a bike at a speed of 166 km: Rs. 12 thousand fine!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->