தமிழகத்தில் காவல்துறைக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது - இபிஎஸ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-

"தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் நிர்வாகத்திறனற்ற ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம்-ஒழுங்கு சீராகிவிடாது. திட்டமிட்டுதான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மையானவர்கள் அல்ல, அவர்கள் போலி குற்றவாளி. எந்தெந்த துறையில் கொள்ளையடிக்கலாம் என்பதுதான் இந்த ஆட்சியின் திட்டம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். எனவே அவரை பற்றி பேச ஒன்றுமில்லை" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps press meet in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->