மின் கட்டணம் ஷாக் அடிக்கிது.. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என எடப்பாடி. பழனிசாமி கோரிக்கை..!
EPS Tweet about Eb bill hike
தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.இந்த கட்டண உயர்வு 2027ம் ஆண்டு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மின்கட்டண உயர்வை திருமப் பெற வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எதிர்கட்சி தலைவரும்,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏழை எளிய நடுத்தர மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது,மக்களை வஞ்சித்து அவர்கள் தலையில் மின்னல் இடியாய் விழுந்திருக்கும் அளவு உயர்ந்திருப்பது மின் கட்டணமா? தங்களின் நிர்வாக திறமையின்மை கட்டணமா?.
இந்த விடியா அரசு மக்களின் மீது ஏற்றியுள்ள பெருஞ்சுமையான மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
EPS Tweet about Eb bill hike