20,000 குரூப்-4 பணியிடங்களை உடனடியாக நிரப்புக.. தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 பணிகளுக்கான தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாக இருக்கும் குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 7,381 பணியிடங்கள் என அறிவித்திருந்தது. அதன் பிறகு கூடுதலாக ஏறக்குறைய 3000-க்கும் மேற்பட்ட இடங்களையும் சேர்த்து மொத்தமாக 10,117 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் தற்போது வரை கலந்தாய்வு நடைபெறவில்லை. மேலும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து ஓய்வு பெறுவதால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே கூடுதல் இடங்களை சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக அரசை வலியுறுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.

இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள். ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS urges TNGovt fill up 20000 Group4 posts immediately


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->