ஈரோடு: பூங்காவை இடித்து தன் வீட்டுக்குச் சாலை அமைக்க முயற்சித்த திமுக கவுன்சிலர்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாநகராட்சியில் திமுகவை சேர்ந்த 20 வார்டு கவுன்சிலர் மோகன் என்பவர் மக்கள் பயன்பாட்டில் உள்ள பூங்காவை இடித்து தன் வீட்டுக்குச் சாலை அமைக்க முயற்சி செய்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட குமரேசன் நகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மக்கள் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், திமுகவை சேர்ந்த கவுன்சிலர் மோகன் குமார் என்பவர் இந்த பூங்காவை ஆக்கிரமிப்பு செய்து, மாநகராட்சியிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் பூங்காவை இடித்து தன் வீட்டுக்குச் சாலை அமைக்க முயற்சி செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதியில் முறையாக சாக்கடை செல்வதற்கும், மழை நீர் செல்வதற்கும் வழி வகை செய்யாத நிலையில் தனது இல்லத்திற்கு பூங்காவை இடித்து சாலை அமைப்பது குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை இடித்து சாலை அமைக்க எந்த வித அனுமதியும் இல்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும், கவுன்சிலரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode dmk councilor some illegal work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->