ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. தி.மு.க இருட்டில் திருட்டு கோழி பிடிக்குறது..சீமான் கிண்டல் !
Erode East by-election DMK catches stealing chicken in the dark Seeman s sarcasm
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க போட்டியிடுகிறதா என்று தெரியவி ல்லை என்றும் இருட்டில் திருட்டு கோழி பிடிப்பது போன்று தான் உள்ளது என்றும் நாடு கருணாநிதி நாடாக மாறிவிட்டதால் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக கருணாநிதி படத்தை போட்டு விடுங்கள் என்றும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு கருணாநிதி நாடாக பெயர் மாற்றி விடலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.
இந்தநிலையில் சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-தமிழ் மொழி தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது என்றும் தமிழ் மொழியின் தொன்மை குறித்து அறிந்தவர்கள் இன்று வரை யாரும் இல்லை எனவும் மொழி ஆய்வு அறிஞர்கள் தமிழை கண்டு வியந்து பார்க்கிறார்கள். திருக்குறளை கண்டு உலக மொழி ஆய்வு அறிஞர்கள் வியக்கிறார்கள் என கூறினார்.
மேலும் ஏசு இறைமகன் பிறந்து 500 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஆங்கில மொழி பிறக்கிறது என்றும்
ஆனால் ஏசு பிறப்பதற்கு 500 ஆண்டுகள் முன்பு இருந்து தமிழ் மொழி இருந்து வருகிறது என ஆட்சியாளர்கள் தமிழர்கள் பெருமையை இப்போது சொல்லி வருகிறார்கள் என கூறியுள்ள சீமான் தமிழ் காட்டுமிராண்டி மொழி, முட்டாளின் பாஷை, தமிழ் படித்தால் பிழைக்க முடியாது என்று சொன்னவர்களை ஒழிக்கமால் எப்படி தமிழை வளர்ப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பெரியாரை அடக்கம் செய்து இருப்பது தமிழ் தாய் மண் தான் என்றும் பெரியார் இல்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லும் நிலையில் பெரியாரால் எங்களுங்கு ஒன்றும் இல்லை என கூறியுள்ள சீமான் பெரியார் சமூகநீதி, சமத்துவம் சகோ தரத்துவம் ஜாதி ஒழிப்பு, பெண்ணியம் உரிமை எங்கே? எதற்கு எடுத்தாலும் திராவிடம், பெரியார் என்றும் தீரன் சின்னமலை, கொடிக்காத்த குமரன், பொன் சங்கர், காளிங்க ராயன் வாழ்ந்தவர்கள் மண் இது. அவர்களின் வாரிசுகள் நாங்கள் என கூறியுள்ளார்.
மேலும் நான் பிரபாகரனை தூக்கி கொண்டு வருகிறேன் என்றும் பிரபாகரன் செய்ததை சொல்லி வாக்கு கேட்கிறேன் என்றும் சீமான் பெரியார் பற்றி பேசுகிறான், திட்டுகிறான் ஓட்டுபோட வேண்டாம் என்று சொல்ல துணிவு இருக்கா? பெரியார் தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தினை வெட்டினார்.
இது அறிவார்ந்தவர்கள் செய்த செயலா? பெரியார் தாய்மொழி தமிழா? நீங்கள் இந்த நாட்டவரா? எதற்காக சொல்ல வந்த கருத்துக்களை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தமிழ் மொழியில் எழுதினார். வேண்டுமெனில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து விட்டு சென்று இருந்தால் நாங்கள் படித்து இருக்க மாட்டோம் என கூறினார் .
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க போட்டியிடுகிறதா என்று தெரியவி ல்லை என்றும் இருட்டில் திருட்டு கோழி பிடிப்பது போன்று தான் உள்ளது என்றும் நாடு கருணாநிதி நாடாக மாறிவிட்டதால் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக கருணாநிதி படத்தை போட்டு விடுங்கள்என்றும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு கருணாநிதி நாடாக பெயர் மாற்றி விடலாம் என சீமான் கூறினார் .
மேலும் பெரியார் சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் தமிழர்கள் என்று சொல்லி இனம் மொழி முன் வைத்து இறக்கப்பட்ட புலிக் கொடியை தூக்கி தற்போது 8.50 லட்சம் வாக்குகள் மூலம் தனித்து நின்று அங்கீகாரம் பெற்று உள்ளோம் என மாறு தட்டிய சீமான் .
1 கோடியே 72 லட்சம் வாக்குகளாக நாம் தமிழர் கட்சியால் மாற்ற முடியாதா. அதனால் மைக் சின்னத்திற்கு வாக்களித்து புதிய அரசியல் தொடக்கமாக ஈரோடு கிழக்கில் இருந்து தொடங்குகள் என இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Erode East by-election DMK catches stealing chicken in the dark Seeman s sarcasm