#ஈரோடு : கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட உள்ள நிலையில் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.

கல்லூரிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் சேலம் நர்சிங் கல்லூரியில் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் அளவு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் ஏன் வரும் தனியார் பொருளியல் கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி,மயக்கம் என உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவர்களை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கல்லூரியில் விடுதியில் ஆய்வு மேற்கொள்ளபட்டது. இது தொடர்பாக பெருந்துறை காவல்துறை  விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode For those who had dinner in the college hostel fainting


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->