ஈரோடு: இரு குழந்தைகளுடன் குடும்பத்தோடு தற்கொலை செய்த தம்பதி! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


கோபி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிறுவலூர் மீன்கிணறு பகுதியைச் சேர்ந்த தனசேகர் (வயது 36) மற்றும் அவரது மனைவி பாலாமணி (வயது 29). 

வெள்ளாங்கோயிலில் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இந்த தம்பதிக்கு மகள் வந்தனா (வயது 10) மற்றும் மகன் மோனீஸ் (வயது 7) உள்ளனர்.

தனசேகரின் வேலை நிலைத்தன்மையின்மையும், கடன் பிரச்சினைகளும் காரணமாக கணவன் மனைவிக்குள் தகராறுகள் நடைபெற்று வந்தன. கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவர்கள் தற்கொலைக்கு தீர்மானித்தனர். 

குழந்தைகளுக்கு தென்னை மர வண்டுகள் கட்டுப்படுத்தும் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தனர். குழந்தைகள் அதை துப்பியபோதும், இருவரும் மாத்திரைகளை உட்கொண்டனர். 

அருகில் இருந்தவர்கள் நால்வரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே தனசேகரும் பாலாமணியும் உயிரிழந்தனர். குழந்தைகள் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தனர். இந்த சமத்துவம் குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Gopi family suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->