வேங்கைவயலை தொடர்ந்து ஈரோட்டிலும் தேர்தல் புறக்கணிப்பு.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குடிநீர் தொட்டியில் மலம் விவாகரத்தில் இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்று வேங்கைவயல் கிராம மக்கள் மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த சுமன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போன்ற சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பண்ணை நகர் மக்கள்  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கிறோம் என்ற பேனரை வைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவு வருகிறது.

இது குறித்து பண்ணை நகர் மக்கள் கூறுகையில், பண்ணை நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். தனி நபர் ஒருவர் பொது வழியை ஆக்கிரமிப்பு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை கண்டித்து பலமுறை சம்பந்தபட்ட அலுவலகத்தில் புகார் குடுத்தும் பயனில்லை. ஆறு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கும் எடுக்காததால் வருகின்ற மக்களவை தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயை பரவியதை அடுத்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் பண்ணை நகர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode pannai nagar people election Neglect


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->