ஈரோடு அருகே பிளஸ் 2 மாணவி திடீர் மாயம்! போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் கைது! சிக்கியது எப்படி? - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது:

ஈரோடு : அந்தியூர் பகுதியைச் சேர்ந்த பனிரெண்டாம் படிக்கும் மாணவி, அதே பகுதியில் இறைச்சி கடையில் வேலை பார்க்கும் சிறுவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரிய வந்ததில் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். 

அதனை தொடர்ந்து மாணவி, 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானதை அடுத்து மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தங்களது மகளை சிறுவன் கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தனர். 

இது குறித்து புகாரின் பேரில் தலைமை காவலர் பொன்னம்மாள் வழக்கு பதிவு செய்து மாணவி மற்றும் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் அந்தியூர் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படுபடி நின்று கொண்டிருந்த சிறுவன், சிறுமையை போலீசார் விசாரணை நடத்தியதில், மாயமான மாணவி என்பது உறுதியானது.

மேலும், சிறுவன், மாணவியிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை பேசி அவரை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

இதனால் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode plus 2 student abducted boy arrested Pocso


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->