உடல்சிதறி பலியான இருவர்! பெரும் வேதனையில் முதல்வர் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


ஈரோடு, புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்திலுள்ள கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதையையும் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம், புஞ்சைதுறையம்பாளையம் 'அ' கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரி செயல்பட்டு வந்துள்ளது.

இந்த கல்குவாரியில் நேற்று (20.8.2024) மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் (வயது 27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த
இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Stone Quarry accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->