ஈரோட்டில் நாளை ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்: காரணம் என்ன?
Erode textile merchants strike tomorrow
சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் கொண்டு வந்து மாற்றம், துறையினருக்கு பாதமாக இருப்பதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
மார்ச் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம் திருத்தத்தின்படி இருப்பு நிலை குறிப்பு கணக்கில் உள்ள வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என சட்டம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கிளாக் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நாளை ஜவுளி வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த போராட்டத்தினால் ஈரோடு பகுதியில் உள்ள 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசைத்தறிகளை ஒருநாள் நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக விசைத்தறிவு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Erode textile merchants strike tomorrow