கதிகலங்கி நிற்கும் திமுக, அதிமுக | ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 70 க்கும் மேற்பட்டோர் களமிறங்கியுள்ள நிலையில்,, இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் படு பயங்கரமாக நடந்து கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். இதேபோல், காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக அமைச்சர்கள் தெரு தெருவாக, வீடு வீடாக சூராவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், நாம் தமிழர், தேமுதிக கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, அதிமுக, திமுகவின் அனுமதி பெறாத தேர்தல் பணிமனைகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று ஈரோடு: வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திமுகவின் 29 தேர்தல் பணிமனைகளுக்கும், அதிமுகவின் 6 பணிமனைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போதுவரை அனுமதி பெறாத காரணத்தினால், அனுமதி இன்றி செயல்பட்டு வந்த அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த தேர்தல் பணிமனைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கும் பணி நடந்துவருகிறது

இதனால் தேர்தல் அதிகாரிகளிடம் இருகட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். என்ன வாக்குவாதம் செய்தலும் அதிகாரிகள் தங்களின் கடமையை செய்துவருவதால், இரு கட்சிகளுமே "என்னதான் செய்வது" என்று கதிகலங்கி போய் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ErodeEastByPolls ADMK DMK 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->