அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.!
Every Thursday booster dose camp
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த சில நாட்களாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு முகாம்களில் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 15 வயதுக்கு மேற்பட்டோர் சிறுவர்களுக்கும் 2 தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இனி வாரத்தில் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இதுவரை 92,522 நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் ஜனவரி 22ஆம் தேதி வழக்கமான சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
English Summary
Every Thursday booster dose camp