ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அமைச்சர் முக்கிய அறிவிப்பு.!
Eye scanner to introduce in ration shop
திருவாரூர் மாவட்டத்தில் 69ஆவது இந்திய கூட்டுறவு வார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால் பொருட்கள் வாங்குவதில் பிரச்சினை இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழக முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் படிப்படியாக தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்திலும் கழிவறை அமைக்கப்படும் கடைக்கு பொருட்கள் வாங்க காத்திருப்போர் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
English Summary
Eye scanner to introduce in ration shop