திருமணமான பெண் மீது ஏற்பட்ட சபலம்.. பேஸ்புக் மூலம் பழிவாங்கிய கொடுமை.! பின் நிகழ்ந்த சம்பவம்.!
Facebook crime in Chennai MGR nagar
சென்னையில் ஒரு இளம் பெண் சுயதொழில் செய்து தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் 22 இல் ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு அவருக்கு நிறைய ஆபாச புகைப்படங்கள், குறுஞ்செய்தி, வீடியோக்கள் உள்ளிட்டவை வந்தன.
தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அந்த நபர் அழைத்துள்ளார். அந்த பெண் படு மோசமாக அவரை திட்டியவுடன் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் செல்போன் எண்ணை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து உங்களுக்கு பாலியல் தேவை இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பலரும் அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுத்து உடலுறவு அடைத்துள்ளனர். இதனால், அந்த பெண்ணுக்கு மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் தி.நகரில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
சைபர் கிரைம் போலீசார் இந்த புகாரை விசாரித்த நிலையில், வழக்கு பதிவு செய்து அந்த பேஸ்புக் கணக்கு மற்றும் செல்போன் எண் உள்ளிட்டவயற்றை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தான் இந்த இழிவான செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, ராஜேஷை எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அந்த பெண் மீது சபலம் ஏற்பட்டதால் அந்த இளைஞர் இப்படி ஒரு மோசமான செயலில் இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
English Summary
Facebook crime in Chennai MGR nagar