தமிழகம் முழுவதும் போலி கூட்டுறவு வங்கிகள்! ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கை! சென்னை கமிஷனரின் பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் குற்றங்கள் குறித்தான "முத்துவும் முப்பது திருடர்களும்" என்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால் "தமிழகம் முழுவதும் போலி வங்கி நடத்தி வரும் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கடந்த ஒரு வருட காலமாக சென்னை, மதுரை,ஈரோடு, திண்டுக்கல் என தமிழக முழுவதும் 8 இடங்களில் போலி "ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட்" என்ற பெயரில் போலி வங்கி நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளனர். 

இவர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த போலி வங்கி மூலம் ஏடிஎம் கார்டுகளை கொடுத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர் நாளொன்றுக்கு ரூ.70 லட்சம் வரை பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்துள்ளனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு மதுரை, நாமக்கல், ஈரோடு உட்பட 8 மாவட்டங்களில் இந்த வங்கி அனுமதியின்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கையால் போலி வங்கி நடத்துவது குறித்தான தகவல் தெரியவந்தது. தற்பொழுது போலி வங்கி நடத்தும் கும்பலைச் சார்ந்த 46 பேரை கைது செய்துள்ளோம். தனியார் வங்கிகளின் டெபிட் கார்டை பயன்படுத்தி போலி வங்கியின் டெபிட் கார்டாக மக்களுக்கு கொடுத்துள்ளனர். போலி வங்கியின் ரூ.56 லட்சம் ரூபாய் மதிப்புடைய பணத்தை முடக்கியுள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்" என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake banks across TamilNadu gang arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->