தொடர் மோசடி.. வாடகை கொடுக்காததால் சிக்கிய போலி காவல் உதவி ஆய்வாளர்..! - Seithipunal
Seithipunal


வாடகை கொடுக்காமல ஏமாற்றி வந்த போலி உதவி ஆய்வாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில்  உதவி ஆய்வாளர் என கூறி பெண் ஒருவர் நீண்ட நாட்களாக தங்கியுள்ளார். அவரிடம் வாடகை கேட்டதற்கு தரமறுக்கவே விடுதி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் சென்னையைச் சேர்ந்த ரோகிணி  என்பது தெரியவந்தது.

அவரிடன் தொடர்ந்து நடத்திய விசாரணையில் காவல் ஆய்வாளர் என கூறி ஆற்காட்டைச் சேர்ந்த ஒருவரிடம் குறைந்த விலையில் கார் வாங்கி தருவதாக 21 லட்சம் ரூபாயும் வேலூர் தொரப்பாடியை சேர்ந்தவரிடம் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பதாக 17 ஆயிரம் ரூபாயும் ஏமாற்றியள்ளார்.

இதை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். காவல்துறையில் உதவி ஆய்வாளர் என கூறி ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake Sub inspector arrested in vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->