உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று முழங்கியவர் யார் இவர்.? இன்று அவருடைய பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார். 

வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.

இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சிவஞானம், 1995ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous freedom fighter and poet MP Sivananam birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->