பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்!!
Farmers crop insurance given the insurance amount immediately GK Vasan
பயிர் காப்பீடு செய்யும் விவசாயிககுக்கு காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் வெளிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது,
தமிழக அரசு, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புயல், வெள்ளம, வறட்சி போன்ற இயற்க்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல்களால் வேளாண் பயிர் சாகுபடியில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காப்பீடு நிறுவனங்களே விவசாயிகளின் நிலைமையை புரிந்துகொண்டு காப்பீடு தொகையை காலத்தே வழங்க வேண்டும். அதை விடுத்து காலம் தாழ்த்துவதும் 6 மாத காலம் வரை காப்பீடு தொகையை கொடுக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக தமிழக அரசு, விவசாயிகளின் உண்மை நிலையை பி[புரிந்துகொண்டு, அவர்களின் இழப்பை,பாதிப்பை, கஷ்டத்தை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை காப்பீடு நிறுவமனத்திடமிருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர முன்வர வேண்டும் என்று கூறிள்ளார்.
English Summary
Farmers crop insurance given the insurance amount immediately GK Vasan