நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மகளை காப்பாற்றுங்கள்.. தந்தை புகார்..! - Seithipunal
Seithipunal


நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மகளை மீட்டு தர கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ நாகேஷ். இவருக்கு மாலா என்ற மனைவியும் வர்தினி  என்ற மகளும் உள்ளனர். ஸ்ரீ நாகேஷும் மாலாவும் நித்யானந்தரின் சீடர்களானவர். இவர்கள் அனைவரும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நித்யானந்த ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். 

இந்நிலையில், தற்போது அவரது மகளை அங்குள்ள நிர்வாகிகள் தொடர்பு கொள்ள விடவில்லை என கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரில் மகளை பல இடங்களுக்கு சென்று மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், திருவண்ணாமலை ஆசிரமத்தில் உள்ள மகளை அவர்களிடம் இருந்து காப்பாற்றி தரவேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father complaint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->