கிருஷ்ணகிரி : மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மாமனார்- கண்டுகொள்ளாமல் சென்ற கணவரால் இளம்பெண் தர்ணா.!! - Seithipunal
Seithipunal


மருமகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மாமனார்- கண்டுகொள்ளாமல் சென்ற கணவரால் இளம்பெண் தர்ணா.!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேச்சம்பள்ளி அடுத்த ஜிங்கள் கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி-விக்னேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு நிதர்சனா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் விக்னேஷ்வரிக்கு கடந்த சில மாதங்களாக மாமனார் பெருமாள் பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்துள்ளார். 

இதுதொடர்பாக விக்னேஸ்வரி தனது கணவரிடம் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், விக்னேஷ்வரியின் கணவர் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்ததனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், விக்னேஷ்வரியின் கணவர் நேற்று முன்தினம் திடீரென்று விக்னேஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு வீட்டைப் பூட்டி விட்டு தன் பெற்றோருடன் சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகைக்குச் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விக்னேஸ்வரி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஊர்த் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் யாரும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விக்னேஸ்வரி தனது வீட்டின் முன்பே தன் மகளோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தனது உரிமைக்காகப் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கணவரின் வீட்டின் முன்பு போராடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

father in law sexuall harassment to daughter in law in krishnagiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->