மகனின் மருத்துவ செலவிற்கு பிரியாணி போட்டியில் பங்கேற்ற தந்தை!....போலீசார் வழக்கு!...நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பிரியாணி போட்டியில்,  அரை மணிநேரத்திற்குள் 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சமும், 4 பிரியாணி சாப்பிட்டால் ரூ.50,000, 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.25,000 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையறிந்த ஏராளமானோர் கடை முன் குவிந்தனர். மேலும் இதில் ஆட்டிசம் பாதித்த தன் மகனின் மருத்துவ செலவுக்காக கலந்துகொண்ட, கணேசமூர்த்தி என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், போட்டி நடத்திய தனியார் உணவகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பிரியாணி போட்டி முன் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாகவும்,  பொதுமக்களுக்கு இடையூறு அளித்ததாகவும் இரண்டு பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கேரளாவில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்த கட்டுங்கடங்காத கூட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது

. இந்த புகாரின் அடிப்படையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அது மட்டுமல்லாமல்  போட்டி நடைபெற்ற தினத்தன்று, நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father participates in biryani competition for sons medical expenses Police case What happened


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->