ஓசூரில் தந்தை பெரியார் சதுக்கம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தந்தை பெரியார் சதுக்கத்திற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 


இது குறித்து தமிழ்நாடு  அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சி உட் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) சொந்தமான சாலைகள், கட்டிடங்கள், பேருந்து நிலையங்களுக்கு பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னர் அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்கள் மற்றும் மாமன்றங்களில் மனம் நிறைவேற்றப்பட வேண்டும் என பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓசூர் மாநகராட்சி மாமன்றம் தீர்மானம் எண்.200 நாள் 28.07.2023- தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முனிஸ்வர் நகர், வ.உ.சி. நகர், நியூ எ.எஸ்.டி.சி ஹட்கோ சந்திப்பு பகுதியை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அப்பகுதிக்கு தமிழில் 'தந்தை பெரியார் சதுக்கம்" எனவும் ஆங்கிலத்தில் 'தந்தை பெரியார் ஸ்கொயர் (Thanthai Periyar Square) எனவும் பெயர் சூட்ட ஓசூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட அனுமதி வழங்குமாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் அரசை கோரியதன் அடிப்படையில் ஒப்புதலுக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father Periyar Square in Hosur Tamil Nadu Government Ordinance Issued


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->