ரேஷன் அட்டைக்கு ரூ.2000! ஃபெஞ்சல் புயல் புயல் நிவாரண டோக்கன் விநியோகம்!
Fenjal Relief fund TN Govt
தமிழகத்தில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் கடந்த 2 ஆம் தேதிவரை ஃபெஞ்சல் புயலின் காரணமாக, வட மாவட்டங்களில் பரவலான மற்றும் கடுமையான மழை பெய்தது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்தன. அதேபோல், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வழக்கத்தை விட அதிக மழை பதிவாகியது.
இந்த மழைப்பொழிவால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பல பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், விவசாய நிலங்களின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
அதிக மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கும் மேல் வெள்ளத்தில் சிக்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கான டோக்கன்களை நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
English Summary
Fenjal Relief fund TN Govt