கோவில் திருப்பணிக்கு நிதி உதவி ...எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.!
Financial assistance for temple renovation Leader of the Opposition Siva presented
வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலயம் மற்றும் ஒதியம்பட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகியவற்றிற்கு திருப்பணி செய்வதற்காக புதுச்சேரி அரசின் இந்து அறநிலையத்துறை மூலம் தலா ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.
புதுச்சேரி மாநிலம் ,வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலயம் மற்றும் ஒதியம்பட்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகியவற்றிற்கு திருப்பணி செய்வதற்காக புதுச்சேரி அரசின் இந்து அறநிலையத்துறை மூலம் தலா ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, இரு கோவில்களின் நிர்வாகிகளிடம் ஆலய சிறப்பு அதிகாரிகள் உமாபதி, பற்குணன் ஆகியோர் முன்னிலையில் காசோலையை வழங்கினார்.
இதில், ஊர் முக்கியஸ்தர்கள் ஜெகன்மோகன், வேலு, பரிமளா ரங்கன், செங்கேணி, முருகையன், குலசேகரன், ஆனந்து, மூர்த்தி, மாரிமுத்து, திருவேங்கடம், சுந்தரம், காத்காத்தவராயான், பாலு, பழனிசாமி, ஏழுமலை, ஜெயபாலன், கந்தசாமி, சுரேஷ், தேசிகன், ரமேஷ், தங்கராசு, மாரியப்பன், குமார், ஆறுமுகம், தாண்டவராயன், முருகன், கோதண்டராமன், செல்வேந்திரன், முருகன், செல்வம், ஏழுமலை மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
English Summary
Financial assistance for temple renovation Leader of the Opposition Siva presented