தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து..!
fire accident in thoothukudi thermal power plant
தூத்துக்குடி துறைமுகத்தையொட்டி தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் அனல்மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் தீ பற்றி எரியத்தொடங்கியது. இதனால் உடனடியாக 1,2,3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும் சூழலில், அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நிலக்கரியை துண்டுகளாக நொறுக்கப்பட்டு அதனை அரவை எந்திரங்களில் செலுத்திபொடியாக்கி விசிறிகள் மூலமாக உலைக்குள் செலுத்தி எரிக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அலகுகளில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
English Summary
fire accident in thoothukudi thermal power plant