திருப்பூர் : பனியன் நிறுவனத்தில் தீ விபத்து.. போராடி தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்.. பல லட்ச ருபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்..! - Seithipunal
Seithipunal



திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பனியன்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சிலர் பனியன் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கும் போது, அந்த பகுதியில் தீ பற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக நிறுவனத்தை விட்டு வெளியே ஓடியுள்ளனர். பனியனில் பற்றிய தீ மளமளவென நிறுவனத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கண்ணிமைக்கும் நொடியில் பரவியுள்ளது.

இதனிடையே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் பனியன் நிறுவனத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்துள்ளனர். 

 

இந்த தீ விபத்தில் பல லட்சம் ருபாய் மதிப்புள்ள பனியன் துணிகள் எரித்து நாசமாகி உள்ளதாக பனியன் நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தால் அந்த நிறுவனம் உள்ள பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைக்குப் பிறகு தெரிய வரும் என்று நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire Accident in Tirupur Baniyan Company


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->