மு.க ஸ்டாலினின் தலைமையில்.. ஒன்று சேரும் "24 கட்சிகள்".. சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாடு..!!
First National Conference for Social Justice under the leadership of MKStalin today
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு சரியாக ஒரு வருடம் இருக்கும் இந்த நிலையில் பாஜக நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராகி வருகிறது. பாஜக சார்பில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்து மூன்று முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகிக்கும் முதல் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.
இந்த நிலையில் பாஜகவின் வியூகத்தை உடைக்கும் வகையில் அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரள தொடங்கியுள்ளன. இந்தியாவில் தற்பொழுது மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சமூக நீதி காண அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் சமூக நீதிக்காக ஊரணையில் திரளுமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் இன்று மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்க உள்ளார். சென்னையில் இருந்து காணொளி வாயிலாக அவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இன்று மாலை 4:30 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலும் உள்ள 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள், முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்திரபிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் எம்பியுமான பரூக் அப்துல்லா, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரைன், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜன் சந்திரகாந்த், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
அதேபோன்று பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார், இந்தியன் யூனியன் முஸ்லிம் அமைப்புச் செயலாளர் முகமது பஷீர், பாரதிய ராஷ்ட்ரிய சமாதி கட்சியை சேர்ந்த டாக்டர் கேசவ ராவ், ராஷ்ட்ரிய சமாஜ் தேசிய தலைவர் மகாதேவ் ஜன்கர், அசாம் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நபா குமார் சாரானியா, ஹரியானா லோக் தந்திர சுரக்ஷா கட்சியைச் சேர்ந்த ராஜ்குமார் ஷைனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
அதேபோன்று திராவிட திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றனர்.
அதே போன்று இந்தியா முழுவதிலும் இருந்து மூத்த பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் நீதிபதிகள், சமூக போராளிகள் என பலதரப்பட்ட மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சமூக நீதிக்கான இந்திய கூட்டமைப்பின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிற்கு வருகை புரிந்த பருகு அப்துல்லா ஸ்டாலின் தேசிய தலைவராக உறி எடுத்து வருவதாகவும் பிரதமராகும் தகுதி ஸ்டாலினுக்கு உள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார். இதன் மூலம் தேசிய அளவில் மு.க ஸ்டாலின் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிய வருகிறது. பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
First National Conference for Social Justice under the leadership of MKStalin today