சென்னை காசிமேட்டில் மீன்களின் விலை இரு மடங்கு உயர்வு.! - Seithipunal
Seithipunal


மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்த நிலையில் சென்னையில் உள்ள காசிமேட்டில் மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் கடந்த 15ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. மீன்கள் உற்பத்திக்காக இந்த மீன் பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு சென்று மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபடமாட்டார்கள்.

மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருவதற்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தத நிலையில், அவர்கள் பிடித்து வந்த மீன்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

எனவே மீன் வரத்து குறைந்துள்ளதால் சென்னை காசிமேட்டில் மீன்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fish rate increased in kasimed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->