தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் மீன்பிடி தடை காலம்.. மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல மும்முரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் பகுதியில் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளது, எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல் பகுதியில் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15 தேதி முதல் அமலுக்கு வந்தது. மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஏதுவாக ஜூன் 15-ஆம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கன்னியாகுமரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில்,  இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக் காலம் நிறைவடைகிறது. ஆகையால், கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். வலை, படகு உள்ளிட்ட உபகரணங்களை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் மும்முரம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fishing ban in tamilnadu ends today midnight


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->