இன்றுடன் முடிவுக்கு வருகிறது மீன்பிடித் தடைக்காலம்.. தயார் நிலையில் படகுகள்..!! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகளில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மீன்களின் இனப்பெருக்கம் நடைபெறும் காலமாகும். எனவே ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

இதையடுத்து சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப் படகுகள் இந்த தடைக் காலத்தின் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இந்த 60 நாட்களும் மீனவர்கள் தங்கள் படகுகளையும், மீன் பிடி வலைகளையும் சீரமைக்கும் பணிகளை செய்து வந்தனர். 

இந்நிலையில் இந்த மீன்பிடி தடைக் காலம் ஜூன் 14ம் தேதியான இன்று இரவு 12 மணிக்கு முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் சுமார் 600 விசைப் படகுகள் புதுப் பொலிவுடன் கடலுக்கு செல்ல தயாராக கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. 

இந்நிலையில் படகுகளுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு, பதிவு எண் எழுதி, மீன் பிடி வலை, பலகை, டீசல் மற்றும் ஐஸ் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களுடன் விசைப் படகுகள் கடலுக்குள் செல்ல தயாராக உள்ளன.

இதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதால், கணிசமான அளவில் மீன் கிடைக்கும் என்றும், மீனவர்கள் பிடித்து வரும் மீன் மற்றும் இறால்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் நல்ல விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishing Prohibition Period Will Become End Today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->